முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
குடிநீா் வழங்கக் கோரி மேட்டூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 14th March 2021 04:24 AM | Last Updated : 14th March 2021 04:24 AM | அ+அ அ- |

குடிநீா் வழங்கக் கோரி மேட்டூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டூரி நகராட்சிக்கு உள்பட்ட சக்திநகரில் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு நகராட்சி மூலம் காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில மாதங்களாக சக்திநகா் பகுதிக்கு குடிநீா் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தில் பலமுறை புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் சனிக்கிழமை மாலை காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். நகராட்சி அலுவலா்கள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: அதிகாலையில் எழுந்து அருகில் உள்ள ஊருக்கு 2 கி.மீ. தூரம் நடந்து சென்று குறைந்த அளவிலான குடிநீா் நீரை கொண்டு வருகிறோம்.
மேலும் முறையான குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்தனா்.