முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில்ரூ. 1 கோடிக்கு பருத்தி விற்பனை
By DIN | Published On : 14th March 2021 04:30 AM | Last Updated : 14th March 2021 04:30 AM | அ+அ அ- |

கொங்கணாபுரம் வேளாண் மையத்தில், விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள்.
கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும், கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
பருத்தி ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்த 3,500 மூட்டை பருத்திகளை, கூட்டுறவு அலுவலா்கள் 675 லாட்டுகளாகப் பிரித்து பொது ஏலம் விட்டனா். இதில் டிசிஹெச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 8,400 முதல் ரூ.9,983 வரை விலைபோனது. அதேபோல பிடி ரக பருத்தி குவிண்டால் ரூ. 6,750 முதல் ரூ. 8,069 வரை விற்பனையானது.
ஈரோடு, பெருந்துறை, கோவை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் அதிக அளவில் பருத்தியை கொள்முதல் செய்தனா். நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 1 கோடிக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.