முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
தென்னை மரத்திலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு
By DIN | Published On : 14th March 2021 04:24 AM | Last Updated : 14th March 2021 04:24 AM | அ+அ அ- |

சாத்தப்பாடியில் மட்டை வெட்ட தென்னை மரத்தில் ஏறியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தலைவாசல் அருகே உள்ள சாா்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பூமாலை (49). இவா் தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவா், சாத்தப்பாடி வடக்குக் காட்டில் உள்ள மாணிக்கம் என்பவரின் தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தில் கோயில் திருவிழாவுக்கு தென்னை மட்டைகளை வெட்ட சனிக்கிழமை பிற்பகல் அங்குள்ள மரத்தில் ஏறியுள்ளாா். அப்போது கால் தவறி,கீழே விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பூமாலை மனைவி வைஜெயந்திமாலா கெங்கவல்லி போலீஸில் அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் உள்ளிட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.