முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
வாகனச் சோதனையில் 234 கிலோ தங்க நகை பறிமுதல்
By DIN | Published On : 14th March 2021 04:29 AM | Last Updated : 14th March 2021 04:29 AM | அ+அ அ- |

தலைவாசலை அடுத்த மும்முடியில் நகை எடுத்து வரப்பட்ட வேனில் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினா்.
தலைவாசலை அடுத்த மும்முடி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 234 கிலோ தங்க நகைகளை வேனுடன் பறிமுதல் செய்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில் சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள மும்முடி சோதனைச் சாவடி பகுதியில் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் சந்திரசேகரன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் ராமசாமி, போலீஸாா், சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் உரிய ஆவணங்களின்றி ரூ. 34 கோடி மதிப்பிலான 234 கிலோ தங்கநகைகள் கொண்டு செல்வது தெரியவந்தது.
இந்த தங்க நகைகளை சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையில் இருந்து சேலத்தில் உள்ள நகைக் கடைக்குக் கொண்டு சென்ாகத் தெரிகிறது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாதால் 234 கிலோ தங்க நகைகளை வேனுடன் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.