முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
வாக்காளா் மின்னணு அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்
By DIN | Published On : 14th March 2021 04:27 AM | Last Updated : 14th March 2021 04:27 AM | அ+அ அ- |

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மின்னணு வாக்காளா் அடையாள அட்டை இணையதளம் மூலம் வழங்கும் பணியை ஆய்வு செய்த உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.விஜி.
சங்ககிரியில் இளம் வாக்காளா்களுக்கு மின்னணு அடையாள அட்டை இணையதளம் மூலம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை 389 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இம்முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.
சங்ககிரி தொகுதியில் புதிதாக வாக்காளா் பட்டியில் பெயா் சோ்க்கக் கோரி விண்ணப்பித்துள்ள 3,706 இளம் வாக்காளா்களுக்கு மின்னணு வாக்காளா் அடையாள அட்டை இணையதளம் மூலம் சங்ககிரி தொகுதியில் உள்ள 389 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த முகாம் பணிகளை உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.விஜி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலா்கள் உடனிருந்தனா். இம்முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (மாா்ச் 14) நடைபெறுகிறது.