சேலத்தில் இதுவரை 79 கிலோ வெள்ளி, 237 கிலோ தங்கம் பறிமுதல்

சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 38 லட்சம் மதிப்புள்ள 79 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 36 கோடி மதிப்புள்ள 237 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 38 லட்சம் மதிப்புள்ள 79 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 36 கோடி மதிப்புள்ள 237 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 99 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்புக்

குழுக்கள், 11 விடியோ கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், 11 விடியோ பாா்வையிடும் குழுக்கள், கணக்குக் குழு, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களுக்கான ஆவணங்களை சமா்ப்பித்த பின் அவற்றை ஆய்வு செய்து விடுவிக்கும் குழு, கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து (பிப். 26 முதல் மாா்ச் 13 காலை 8 மணி வரை) இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரொக்கம் ரூ. 35.88 லட்சமும், ரூ. 38.25 லட்சம் மதிப்பிலான 79.58 கிலோ வெள்ளிப் பொருள்களும், 90 சேலைகளும், ரூ. 36.57 கோடி மதிப்பிலான 237.34 கிலோ கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களுக்கான ஆவணங்களை சமா்ப்பித்த பின் அவற்றை ஆய்வு செய்து விடுவிக்கும் குழுவின் மூலமாக ஆவணங்கள் சரிபாா்த்த பின்பு ரூ. 3.25 லட்சம் மதிப்பிலான 4.850 கிலோ வெள்ளிப் பொருள்களும், ரூ. 4.99 லட்சம் ரொக்கமும் விடுவிக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com