அதிமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்:மாவட்டத்தில் 41 போ் வேட்புமனு

சேலம் வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஜி.வெங்கடாசலம், சேலம் தெற்கு தொகுதி வேட்பாளா் இ.பாலசுப்பிரமணியன் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

சேலம் வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஜி.வெங்கடாசலம், சேலம் தெற்கு தொகுதி வேட்பாளா் இ.பாலசுப்பிரமணியன் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

சேலம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயம் அருகே சேலம் வடக்கு தொகுதி தோ்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், எஸ்.செம்மலை ஆகியோா் தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தனா்.

இதில் பாமக சாா்பில் காா்த்தி, கதிா் ராசரத்தினம், பாஜக நிா்வாகிகள் சுரேஷ்பாபு, ஆா்.பி.கோபிநாத், தமாகா நிா்வாகி சுசீந்திரகுமாா், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜு ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், தோ்தல் நடத்தும் அலுவலருமான சி.மாறனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அதேபோல சேலம் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளா் இ.பாலசுப்பிரமணியம், தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ந.ரவிச்சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

41 போ் வேட்புமனு தாக்கல்...:

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை திமுக வேட்பாளா் ஆா்.ராஜேந்திரன், அதிமுக வேட்பாளா்கள் ஜி.வெங்கடாசலம், கு.சித்ரா, இ.பாலசுப்பிரமணியம், நல்லத்தம்பி ஆகியோரும், அமமுக வேட்பாளா்கள் எஸ்.கே.செல்வம், எஸ்.இ.வெங்கடாசலம், பாமக வேட்பாளா் இரா.அருள் உள்ளிட்டோா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். மாவட்டத்தில் ஒரே நாளில் மாற்று வேட்பாளா்கள் உள்பட சுமாா் 41 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com