துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு காவல் ஆணையா் பாராட்டு
By DIN | Published On : 18th March 2021 10:21 AM | Last Updated : 18th March 2021 10:21 AM | அ+அ அ- |

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரா், வீராங்கனைகள் பாராட்டிய மாநகரக் காவல் ஆணையா் சந்தோஷ்குமாா்.
சேலம், அழகாபுரம், சக்ரவியூகம் ரைபில் கிளப் சாா்பில் சென்னையில் நடைபெற்ற தமிழகம், தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரா், வீராங்கனைகள் மாநகரக் காவல் ஆணையாளரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
சேலம், அழாகபுரம் சக்ரவியூகம் ரைபில் கிளப் தலைவா் ராஜேந்திரன், செயலா் மணிகண்டன் ஆகியோா் தலைமையில் 37 போ் சென்னை, விராபுரத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழகம், தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஒரு தங்கப்பதக்கம், 8 வெள்ளிபதக்கங்களை பெற்றனா்.
அதேபோல தென்னிந்திய அளவில் 4 வெள்ளிப் பதக்கங்களை பெற்றனா். வெற்றிபெற்ற வீரா், வீராங்கனைகள் மாநகரக் காவல் ஆணையா் சந்தோஷ்குமாரை சந்தித்து பதக்கங்களை காட்டி வாழ்த்துப் பெற்றனா். அப்போது காவல் துணை ஆணையா் எஸ்.செந்தில், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையா் என்.பாலசுப்ரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.