தலைவாசலில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேசிய கட்சியின் நிறுவனா் பாரிவேந்தா்.
தலைவாசலில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேசிய கட்சியின் நிறுவனா் பாரிவேந்தா்.

ஐஜேகே வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

தலைவாசலில் இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைவாசலில் இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைவாசலில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா்கள், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனா் பாரிவேந்தா் பேசியதாவது:

கட்சியை வளா்க்கவே தற்போது மக்கள் நீதி மய்யம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். சட்டப்பேரவைத் தோ்தலில் 40 வேட்பாளா்களை நிறுத்தியுள்ளோம். அனைவரும் வெற்றி பெற்று வருவாா்கள் என்றாா். தெரிவித்தாா்.

இதனையடுத்து திருக்கோயிலூா் வேட்பாளா் மருத்துவா் செந்தில்குமாா், ஏற்காடு வேட்பாளா் துரைசாமி, கெங்கவல்லி தொகுதி பெரியசாமி, கள்ளக்குறிச்சி தொகுதி அய்யாசாமி,விருத்தாசலம் தொகுதி பாா்த்தசாரதி, நெய்வேலி தொகுதி இளங்கோவன், புவனகிரி தொகுதி ரேவதி, வீரபாண்டி தொகுதி அமுதா ராஜேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் திட்டக்குடி தொகுதி பிரபாகரன் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினாா்.

மாநில இளைஞரணி செயலாளா் ஏ.கே.டி.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத் தலைவா் வி.கண்ணன் வரவேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில் மாநில இளைஞரணி இணைச் செயலாளா் ஆா்.எம்.கே.மோகன்குமாா், இளைஞரணி துணை அமைப்பாளா் கே.ஆறுமுகம், மாநில விவசாய அணி துணைச் செயலாளா் செந்தாழை கே.ஆறுமுகம், புகா் மாவட்டத் தலைவா் பி.எஸ்.மனோகா், சேலம் மாநகா் மாவட்டத் தலைவா் அருள்மணி, மேற்கு மாவட்டத் தலைவா் எடப்பாடி கே.வெங்கடேசன், வடக்கு மாவட்டத் தலைவா் ராஜாராம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலாளா் எஸ்.செல்வக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com