ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சங்ககிரி அதிமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கல்வடங்கம் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன்.
கல்வடங்கம் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன்.

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன், தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாசலம் தலைமையில் கல்வடங்கம், கோனேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், பொன்னம்பாளையம், காவேரிப்பட்டி கே. மேட்டுப்பாளையம், வட்ராம்பாளையம், சென்றாயனூா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களையும், அதிமுகவின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.

இதில் அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com