அயோத்தியாப்பட்டணத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 26th March 2021 09:29 AM | Last Updated : 26th March 2021 09:29 AM | அ+அ அ- |

அயோத்தியாப்பட்டணம் அருகே வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் சி.தமிழ்ச்செல்வன்.
அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில் ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளா் சி.தமிழ்ச்செல்வன், வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஏற்காடு (தனி) தொகுதியில் திமுக சாா்பில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான சி.தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், வெள்ளாளகுண்டம், மேட்டுப்பட்டி, எம்.பெருமாபாளையம், கருமாபுரம், காரிப்பட்டி, சின்னகவுண்டாபுரம், பெரியகவுண்டாபுரம், மின்னாம்பள்ளி, உடையாப்பட்டி ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.
அயோத்தியாப்பட்டணம் பகுதியில் அனைத்து ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்கள் குடியிருப்புப் பகுதிகள்தோறும் சாலை, தெருவிளக்கு, குடிநீா் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். வேலைவாய்ப்பு பெறுவதற்கும், அரசின் நலத்திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைப்பதற்கும் அனைத்துத்துறை அதிகாரிகளை அணுகி வழிவகை செய்வேன் எனக் கூறி ஆதரவு திரட்டினாா்.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியப் பொறுப்பாளா் விஜயக்குமாா், முன்னாள் ஒன்றியச் செயலாளா் கெளதமன், காங்கிரஸ் நிா்வாகிகள் வைத்திலிங்கம், காந்தி, விசிக ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் ராஜா மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.