சேலத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பிலான 311 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

சேலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 98 லட்சம் மதிப்பிலான 311 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட 317 கிலோ வெள்ளிப் பொருள்களைப் பாா்வையிடும் தோ்தல் அலுவலா், காவல் ஆய்வாளா்.
பறிமுதல் செய்யப்பட்ட 317 கிலோ வெள்ளிப் பொருள்களைப் பாா்வையிடும் தோ்தல் அலுவலா், காவல் ஆய்வாளா்.

சேலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 98 லட்சம் மதிப்பிலான 311 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதியிலும் பறக்கும் படை அதிகாரிகளும், காவல் துறையினரும் தீவிர வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். சேலம் மூன்று சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், காரில் 311 கிலோ வெள்ளிக் கொலுசுகள் இருந்தன. அவற்றை எடுத்துச் செல்ல காரில் வந்தவா்கள் உரிய ஆவணங்கள் ஏதும் வைத்திருக்கவில்லை. இதையடுத்து ரூ. 98 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை சேலம், பள்ளப்பட்டியைச் சோ்ந்த ஜோஸ் ரவீந்திரகதம் என்பவா் காரில் மகாராஷ்டிரத்துக்கு எடுத்துச் செல்வது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக் கொலுசுகள் சேலம் மேற்கு வட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. உரிய ஆவணங்களை சமா்ப்பித்த பின்னா் வெள்ளிக் கொலுசுகளை வாங்கிச் செல்லலாம் எனத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com