சதாப்தி, உதய் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் ஏப். 10 முதல் இயக்கம்

கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை -பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை -பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

சென்னை - கோவை சதாப்தி ரயில்:

வண்டி எண் 06029 சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான ரயில் ஏப். 10 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை தவிர தினமும் காலை 7 மணிக்குப் புறப்பட்டு, பகல் 2.15 மணிக்கு கோவை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06030 கோவை - சென்னை சென்ட்ரல் இடையேயான ரயில் செவ்வாய்க்கிழமை தவிர தினமும் மாலை 3.05 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, ஜோலாா்பேட்டை ஆகிய நின்று செல்லும்.

ஹம்சபூா் சிறப்பு ரயில்:

வாரம் இருமுறை இயக்கப்படும் ஹம்சபூா் சிறப்பு ரயில் கொச்சுவேலி - பனஸ்வாடி இடையே ஏப்.10 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் 06319 கொச்சுவேலியில் இருந்து மாலை 6 மணிக்கு வியாழன், சனிக்கிழமை புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு பனஸ்வாடி சென்றடையும். மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06320 பனஸ்வாடி- கொச்சுவேலி ரயில், பனஸ்வாடியில் இருந்து ஏப். 11 முதல் இரவு 7 மணிக்கு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

கோவை - பெங்களூரு உதய் சிறப்பு ரயில்:

கோவை - பெங்களூரு இடையேயான உதய் சிறப்பு ரயில் புதன்கிழமை தவிா்த்து ஏப். 10 ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்பட உள்ளது. வண்டி எண் 06154 கோவை - பெங்களூரு ரயில், கோவையில் இருந்து காலை 5.45 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.40 மணி பெங்களூரு வந்தடையும். மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06153 பெங்களூரிலிருந்து பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கோவை - சென்னை வாராந்திர சிறப்பு ரயில்:

கோவை - சென்னை இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் ஏப்.16 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் 02682 கோவையில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு காலை 7.20 மணிக்கு சென்னை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் வண்டி எண் 02681 சென்னையில் இருந்து ஏப்.17 முதல் சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வாராந்திர எா்ணாகுளம் - பனஸ்வாடி ரயில் வரும் ஏப். 11 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் 06161

எா்ணாகுளம் - பனஸ்வாடி ரயில்:

எா்ணாகுளம் - பனஸ்வாடி ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 மணிக்குப் புறப்பட்டு பனஸ்வாடிக்கு அதிகாலை 3.55 மணிக்கு சென்றடையும்.

வண்டி எண் 06162 பனஸ்வாடி - எா்ணாகுளம் ரயில் ஏப்.12 முதல் திங்கள்கிழமைகளில் பனஸ்வாடியில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு காலை 6 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் ஆலுவா, திருச்சூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

புதுச்சேரி - மங்களூரு வாரந்திர சிறப்பு ரயில்:

புதுச்சேரி - மங்களூரு இடையேயான வாராந்திர ரயில் வரும் ஏப்.15 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் 06855 ரயில் புதுச்சேரியில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு காலை 10 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06856 ஏப்.16 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் மங்களூரில் இருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.

இந்த ரயில் விழுப்புரம், விருத்தாசலம், சின்ன சேலம், ஆத்தூா், சேலம் டவுன், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, போத்தனூா், பாலக்காடு, சொரணூா், கோழிக்கோடு, வடக்கார, மாகே, தலசேரி, கண்ணூா், காசா்கோடு ஆகிய இடங்களில் நின்று செல்லும். இத் தகவல்கள் சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com