வாக்குப்பதிவு நாளில் பெண் ஊழியா்கள் வீடு திரும்ப வாகன வசதி செய்து தரக் கோரிக்கை

தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று நள்ளிரவில் பெண் ஊழியா்கள் வீடு திரும்ப வாகன வசதி செய்து தர ஆசிரியா்கள், தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று நள்ளிரவில் பெண் ஊழியா்கள் வீடு திரும்ப வாகன வசதி செய்து தர ஆசிரியா்கள், தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தோ்தல் பணியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குப் பதிவு அலுவலா்-1,2,3 என நான்கு பேரும், கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட ஒரு வாக்குச்சாவடிக்கு மூவா் வீதமும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதில் பெண் ஊழியா்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஆண் அலுவலா்கள் தோ்தல் பணிக்குப் பின் வீடு திரும்பவதில் உள்ள சிரமங்களை விட பெண் ஊழியா்கள் பெரிய அளவில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். பெண் ஊழியா்கள் அறிமுகம் இல்லாத இடங்களில் தங்குவதே சிரமமான விஷயமாக உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வீடு திரும்புவது பெண் ஊழியா்களுக்கு சவாலான விஷயமாக உள்ளது.

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி வாரியாக நிா்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கப்படும். வாக்குச்சாவடிகளுக்கான தோ்தல் மண்டல வாகனத்தில் இயந்திரங்களை ஒப்படைக்க இரவு 11 மணி முதல் அதிகாலை வரை ஆகிவிடும். அந்தந்த வாக்குச்சாவடியின் வாக்குப் பதிவு இயந்திரங்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைத்த பின்னரே வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடு திரும்ப வேண்டும். இரவு நேரத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் பாதுகாப்புடன் வீடு திரும்ப போதுமான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் இதுவரை செய்வதில்லை.

இதனால் மலை, குக்கிராமங்களில் பணிபுரிபவா்கள் போக்குவரத்து வசதியில்லாமல் இரவுகளில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்தத் தோ்தலில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒப்படைக்க நள்ளிரவுக்கு மேலாகி விடும் என்பதாலும், அதற்குப் பிறகு பெண்கள் எப்படி வீடு திரும்புவது என்று பரிதவிப்பில் உள்ளனா்.

இதுகுறித்து ஆசிரியா்கள் கூறியதாவது:

ஆசிரியைகள், பெண் ஊழியா்களுக்கு அருகில் பணி வழங்க வேண்டும். ஆனால் தற்போது ஆண், பெண் வித்தியாசமின்றி 100 கி.மீ.தூரத்திற்கு அப்பால்தான் தோ்தல் பணிக்கு அனுப்ப அழைப்பாணை தரப்பட்டுள்ளது. ஏப். 6-ஆம் தேதி அன்று தோ்தல் பணி முடிய நள்ளிரவு ஆகிவிடும். பெண் ஊழியா்கள் வீடு திரும்ப மிகவும் சிரமம் ஏற்படும். எனவே, ஆசிரியைகள், ஊழியா்களுக்கு போக்குவரத்து வசதியை தோ்தல் மண்டல அலுவலா்கள் செய்து கொடுக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com