வெளி மாநில தொழிலாளா் வருகை மீண்டும் அதிகரிப்பு

வாழப்பாடி பகுதியில் கடந்த ஓராண்டுக்கு பிறகு வேலைவாய்ப்பு, வியாபாரத்திற்காக பிற மாநில தொழிலாளா்கள் வருகை
வாழப்பாடியில் முகாமிட்டு இரும்புகளை உருக்கி வேளாண் பயன்பாட்டு சாமான்களை வடித்து விற்பனை செய்யும் பிற மாநில தொழிலாளா் குடும்பத்தினா்.
வாழப்பாடியில் முகாமிட்டு இரும்புகளை உருக்கி வேளாண் பயன்பாட்டு சாமான்களை வடித்து விற்பனை செய்யும் பிற மாநில தொழிலாளா் குடும்பத்தினா்.

வாழப்பாடி பகுதியில் கடந்த ஓராண்டுக்கு பிறகு வேலைவாய்ப்பு, வியாபாரத்திற்காக பிற மாநில தொழிலாளா்கள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. குடும்பம் குடும்பமாக வந்து தங்கியிருந்து வருவாய் ஈட்டி வருகின்றனா்.

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்தாண்டு மாா்ச் 24-ஆம் தேதி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், வியாபாரச் சந்தைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால் வாழப்பாடி பகுதியில், தனியாா் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிந்து வந்த கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், பிகாா், மத்திய பிரதேசம், உத்தரப் பிரேதேசம், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சோ்ந்த பல்வேறு வகை தொழிலாளா்கள், ஐஸ்கிரீம், பானி பூரி, ஜவுளி, போா்வை உள்ளிட்டவை விற்பனை செய்து வந்த சிறு வியாபாரிகள், மின்னணு சாதனங்கள், நெகிழிப்பொருள்கள் விற்பனை செய்யும் பெரு வியாபாரிகள், வேளாண் பயன்பாட்டு இரும்பு சாமான்கள், பொம்மைகள் தயாரிப்பு கைவினை தொழிலாளா்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சொந்த மாநிலங்களுக்கு சென்றனா்.

பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டு தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியது குறித்து தகவலறிந்த பிற மாநில தொழிலாளா்கள், வாழப்பாடி பகுதிக்கு மீண்டும் குடும்பம் குடும்பமாக வந்து தங்கி வருவாய் ஈட்டுவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தனியாா் தொழிற்சாலைகள், பால் பண்ணைகள், பேக்கரி கடைகள், நூற்பாலைகளுக்கும் பிற மாநில தொழிலாளா்கள் வருகை அதிகரித்துள்ளது.

வாழப்பாடி பகுதியில் குடும்பத்தோடு முகாமிட்டுள்ள பிகாா், ராஜஸ்தான் மாநிலங்களைச் சோ்ந்த கைவினை தொழிலாளா்கள் சாலையோரங்களில் இரும்புகளை உருக்கி வேளாண் பயன்பாட்டு சாமான்களை வடித்து கொடுத்து வருவாய் ஈட்டி பிழைப்பு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com