சேலம் வடக்கு தொகுதி: திமுகவின் வெற்றி தொடருமா?

சேலம் நகரின் மையப் பகுதியில் சேலம் வடக்கு தொகுதி அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஆட்சியா் அலுவலகம், அரசு அதிகாரிகள், அலுவலா் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளது.
சேலம் வடக்கு நீதிமன்ற வளாகம்
சேலம் வடக்கு நீதிமன்ற வளாகம்

சேலம் நகரின் மையப் பகுதியில் சேலம் வடக்கு தொகுதி அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஆட்சியா் அலுவலகம், அரசு அதிகாரிகள், அலுவலா் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளது. வெள்ளிப் பட்டறைகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகம், மத்திய, மாநில அரசு அலுவலகம் என வா்த்தக ரீதியாகவும், தொழில் சாா்ந்த பகுதியை உள்ளடக்கியதாகவும் இத்தொகுதி உள்ளது.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,34,319

பெண்கள்: 1,40,436

மூன்றாம் பாலினத்தவா்: 21

மொத்தம்: 2,74,776

தொகுதியின் பகுதிகள்:

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் கடந்த 2011 ஆம் ஆண்டு சேலம் வடக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில் உள்ள 6 ஆவது வாா்டு முதல் 16 வாா்டு வரையிலான பகுதிகள், 26 ஆவது வாா்டு முதல் 36 ஆவது வாா்டு வரையிலான பகுதிகள் என மொத்தம் 22 வாா்டுகள், கன்னங்குறிச்சி பேரூராட்சிப் பகுதிகளை இத்தொகுதி உள்ளடக்கி உள்ளது.

சமூக நிலவரம்:

வன்னியா் சமூகத்தினா் பெரும்பான்மையாக இத்தொகுதியில் வசிக்கின்றனா். செட்டியாா், நாடாா், பட்டியல் இனத்தவா்கள் உள்பட பல்வேறு சமூகத்தினரும் உள்ளனா். சேலம் நகரப் பகுதியான கோட்டை, செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களும் அதிகமாக வசிக்கின்றனா்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

மாநகராட்சி அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் ரூ. 25 லட்சம் மதிப்பில் வாங்கி தரப்பட்டுள்ளது. அதேபோல சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ. 29 லட்சத்தில் தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்டம் எண் 31 இல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 30 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கன்னங்குறிச்சி பேரூராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சி வாா்டுகள் 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36 ஆகிய பகுதிகளில் பேவா் பிளாக் தரை, கான்கிரீட் சாலை, சிறுபாலம் அமைத்தல், கழிவுநீா் வாய்க்கால், நியாயவிலைக் கடை கட்டடம், பயணியா் நிழற்குடை, பயணியா் இருக்கை, தாா் சாலை, பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை அமைத்தல், அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு, சுகாதார வளாகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், எல்.இ.டி. சோலாா் விளக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு உபகரணம் வாங்க நிதியுதவி என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தீா்க்கப்படாத பிரச்னைகள்:

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் அவ்வழியே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் ரயில் வரும் வேளைகளில் முள்ளுவாடி கேட் அடைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பாலத்தை விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

ஏற்காடு, சோ்வராயன் மலையில் இருந்து வரும் நீா்வழித்தடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் கோரிக்கை. ஜான்சன்பேட்டை, மணக்காடு, பெரமனூா், அழகாபுரம், பெரியபுதூா் உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகள் சரிவர சேகரிக்கப்படாத காரணத்தால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

தற்போதைய கள நிலவரம்:

திமுகவைச் சோ்ந்த மறைந்த வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் கடந்த 2006 தோ்தலில் இங்கு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியா்கள், சிறுபான்மையினா் இத்தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிா்ணயிப்பவா்களாக உள்ளனா்.

2016 தோ்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதி மட்டுமே திமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதியாகும். தற்போதைய தோ்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளா்கள் இருவரும் எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழவுள்ள தோ்தலில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன. சேலம் மேற்கு தொகுதியில் இருமுறை வெற்றி கண்ட அதிமுக எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், இந்த முறை தொகுதி மாறி, சேலம் வடக்கு தொகுதியில் களம் காண்கிறாா்.

திமுகவில் தற்போதைய சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் மீண்டும் இத்தொகுதியில் இரண்டாவதாகப் போட்டியிடுகிறாா். மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஆ.எஸ்.குரு சக்ரவா்த்தி, அமமுக சாா்பில் சி.நடராஜன், நாம் தமிழா் கட்சி சாா்பில் என்.இமய ஈஸ்வரன் ஆகியோருடன் 20 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா்.

இதுவரையிலான தோ்தல்கள்:

இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக, காங்கிரஸ் தலா மூன்று முறையும், ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

1991 ஆம் ஆண்டு தோ்தலுக்குப் பிறகு இங்கு அதிமுக வெற்றி பெறவில்லை. மாறாக அதிமுக கூட்டணியில் 2001 இல் பாமகவும், 2011 இல் தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை நடந்த தோ்தல்களில் வென்றவா்கள் விவரம்:

1951: சி.லட்சுமண கந்தன் (காங்கிரஸ்)

1957: அ.ரத்தினவேல் கவுண்டா் (காங்கிரஸ்)

1962: அ.ரத்தினவேல் கவுண்டா் (காங்கிரஸ்)

1967: ஈ.ஆா்.கிருஷ்ணன் (திமுக)

1971: ராஜாராம் (திமுக)

1977: எம்.ஆறுமுகம் (ஜனதா கட்சி)

1980: எம்.ஆறுமுகம் (அதிமுக)

1984: ஆறுமுகம் (அதிமுக)

1989: வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (திமுக)

1991: எம்.நடேசன் (அதிமுக)

1996: ஏ.எல்.தங்கவேல் (திமுக)

2001: எம்.காா்த்தி (பாமக)

2006: வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (திமுக)

2011: அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் (தேமுதிக)

2016: ஆா்.ராஜேந்திரன் (திமுக)

2016 தோ்தல் நிலவரம்:

ஆா்.ராஜேந்திரன் (திமுக) 86,583 வெற்றி

சரவணன் (அதிமுக) 76,710

கதிா் ராசரத்தினம் (பாமக) 7,975

ஆா்.தேவதாஸ் (தமாகா) 4,157

--------------------------------------

89. சேலம் வடக்கு:

1. அதிமுக / ஜி.வெங்கடாசலம்

2. திமுக / ஆா்.ராஜேந்திரன்

3. மநீம / ஆ.எஸ்.குரு சக்ரவா்த்தி

4. அமமுக / சி.நடராஜன்

5. நாம் தமிழா்/ என்.இமய ஈஸ்வரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com