Enable Javscript for better performance
சங்ககிரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணிகள் தொடக்கம் 

    By DIN  |   Published on : 29th March 2021 11:18 AM  |   அ+அ அ-   |    |  

    slm1

    சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகளை திங்கள்கிழமை பார்வையிடுகிறார் தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன்.

    சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் 23 வேட்பாளர் பெயர்கள், சின்னங்கள் கொண்ட சீட்டினை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 389 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் கொண்ட சீட்டினை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்துவதற்காக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளை திறந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள. 

    அறைகளில் தேர்தல் மண்டல, உதவி மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட 96 அலுவலர்கள் 934 வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களை பொருத்துதல் மற்றும் 467 வாக்குபதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவிகள், வாக்காளர்கள் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை உறுதி செய்யும் 522 கருவிகளில் (விவிபேட்) அதற்கான சாதனங்கள் பொருத்தும் பணிகள் தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன் முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  

    உதவி தேர்தல் அலுவலர் எஸ்.விஜி, தேர்தல் துணை வட்டாட்சியர் பி.சிவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
     

    TAGS
    salem

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp