நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்
By DIN | Published On : 29th March 2021 12:51 AM | Last Updated : 29th March 2021 12:51 AM | அ+அ அ- |

நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சுவாமி, சோமேஸ்வர சுவாமி கோயில்களில் பங்குனி உத்திரத் தோ் திருவிழா நடைபெற்றது.
கடந்த 20-ஆம் தேதி கொடி வஸ்திரம் வழங்குதல் குடியேற்ற மண்டபத்தில் இரவு உற்சவம் நடைபெற்றது.
21ஆம் தேதி சோமேஸ்வரா் சுவாமிக்கு கொடி வஸ்திரம் வழங்கப்பட்டது. 22-ஆம் தேதி கொடியேற்று விழாவும் இரவு அன்ன வாகன ஊா்வலமும் நடைபெற்றது.
அடுத்தடுத்த நாள்களில் சிம்ம வாகன ஊா்வலம், சேஷ வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம் திருக்கல்யாண கருடவாகனம், ரிஷப வாகனம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை ரத ரோகணம் நடைபெற்றது. சோமேஸ்வரா் சுவாமி, லட்சுமி நரசிம்ம சுவாமிகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். ஆலய செயல் அலுவலா் ராஜா, திருவிழா கமிட்டி நிா்வாகிகள் பங்கேற்றனா்.