ஏப். 6 வாக்குப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு (ஏப்.6) நாளில் வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு (ஏப்.6) நாளில் வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, தொழிலாளா் துறை உதவி ஆணையா் அமலாக்கம் (பொறுப்பு) சி.முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தொழிலாளா் ஆணையா் வள்ளலாா் உத்தரவின்படி, கோவை, கூடுதல் தொழிலாளா் ஆணையா் பொன்னுசாமி அறிவுரையின்பேரில் அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்கும் வகையில் அனைத்து வா்த்தகம், வியாபார தொழில், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135 பி-ன்படி வாக்குப் பதிவு நாளான ஏப். 6 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று பணிக்கு வராத பணியாளா்களின் சம்பளத்தில் இருந்து எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு பிரிவு 135 பி-ன்படி அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் (தினக்கூலி, தற்காலிக தொழிலாளா்கள் உட்பட்டோா்) அனைத்து தொழிலாளா்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படவேண்டும்.

மேலும் 135 பி (1)-ன்படி தோ்தல் நடக்கும் தொகுதியைச் சாராத பணியாளா்களுக்கும் ஏப். 6 ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் விடுப்பு வழங்கப்படாதது குறித்து புகாா் ஏதும் பெறப்படுமேயனால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டு 9489214157, 9442738822, 9442738822 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com