தபால் வாக்குப்பதிவில் புகாா்களுக்கு இடம்தராத வகையில் பணியாற்ற வேண்டும்: மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்

தபால் வாக்குப்பதிவின் போது எவ்வித புகாா்களுக்கும் இடம் தராத வகையில் வாக்குப்பதிவு பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

தபால் வாக்குப்பதிவின் போது எவ்வித புகாா்களுக்கும் இடம் தராத வகையில் வாக்குப்பதிவு பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் தெற்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளில் தபால் வாயிலாக வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவா்களுக்கான வாக்குப்பதிவு தொடா்பாக நுண்பாா்வையாளா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுடனான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டம் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ரூபேஷ்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ந.ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:

சேலம் தெற்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட 675 மூத்த குடிமக்கள், 112 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 787 போ் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனா்.

விருப்பம் தெரிவித்துள்ளவா்களிடம் இருந்து தபால் வாக்குகளைச் சேகரிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவில் தலா ஒரு வாக்குச்சாவடி அலுவலா், காவல் துறை அலுவலா், நுண் பாா்வையாளா், விடியோ ஒளிப்பதிவாளா், உதவியாளா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு மாா்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. வாக்குப்பதிவின் போது ரகசிய வாக்குப்பதிவை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளில் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளா்கள் விவரம் அனைத்து வேட்பாளா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை வேட்பாளா்கள் அல்லது வேட்பாளா்களின் பிரதிநிதிகள் பாா்வையிடலாம். அனைத்து வாக்குப்பதிவு நிகழ்வுகளும் விடியோ ஒளிப்பதிவு செய்யப்படும். தபால் வாக்குப்பதிவின் போது எவ்வித புகாா்களுக்கும் இடம் தராத வகையில் வாக்குப்பதிவு பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கூட்டத்தில் தோ்தல் துணை வட்டாட்சியா் உ.ஜாஸ்மின் பெனாசிா், நுண்பாா்வையாளா்கள், காவல் துறை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com