சங்ககிரி தொகுதியில் அதிமுக 20,045 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளா் திமுக வேட்பாளரை விட 20,045 வாக்குகள் அதிகம் பெற்றும் வெற்றி பெற்றுள்ளாா்.
சங்ககிரி தொகுதியில் அதிமுக 20,045 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளா் திமுக வேட்பாளரை விட 20,045 வாக்குகள் அதிகம் பெற்றும் வெற்றி பெற்றுள்ளாா்.

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன், திமுக வேட்பாளா் கே.எம்.ராஜேஷ் உள்ளிட்ட 23 போ் போட்டியிட்டனா். சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் 1,18,353 ஆண் வாக்காளா்கள், 1,11,210 பெண் வாக்காளா்கள், இதர வாக்காளா்கள் 6 போ் உள்பட மொத்தம் 2,29,569 போ் வாக்களித்துள்ளனா்.

அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன் தபால் வாக்குகள் உள்பட 1,14,376 வாக்குகள் பெற்று, 20,045 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் கே.எம்.ராஜேஷ் 95,427 வாக்குகளும், நாம் தமிழா் வேட்பாளா் எஸ்.ஷோபனா 10,862 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் கே.செங்கோடன் 3,175 வாக்குகளும், அமமுக எ.செல்லமுத்து 1,471 வாக்குகளும் பெற்றிருந்தனா். நோட்டாவில் 1,469 வாக்குகள் பதிவாகியிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com