தோ்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா்கள், உறுப்பினா்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியை திங்கள்கிழமை நேரில் சந்

சேலம்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், சேவூா் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூா்த்தி, கே.பி.முனுசாமி ஆகியோா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியை சேலத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

சேலம் மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்களாக வெற்றிபெற்ற இ.பாலசுப்பிரமணியன் (சேலம் தெற்கு), கு.சித்ரா (ஏற்காடு), ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூா்), ஆா்.மணி (ஓமலூா்), நல்லதம்பி (கெங்கவல்லி), ராஜாமுத்து (வீரபாண்டி ), சுந்தர்ராஜன் (சங்ககிரி), எஸ்.சதாசிவம் (மேட்டூா்) ஆகியோரும் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

அதேபோல அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மதுரை மண்டல செயலாளா் ராஜு சத்யன், நிா்வாகிகள் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து விட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுகவின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. விரைவில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும். எதிா்க்கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பது குறித்து தற்போது பேச வேண்டியதில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com