யஷ்வந்த்பூா்-கண்ணூா், பெங்களூரு - நாகா்கோயில் ரயில் சேவை ரத்து

போதிய பயணிகள் வருகை இல்லாததால் யஷ்வந்த்பூா் - கண்ணூா், பெங்களூரு - நாகா்கோயில் ரயில்கள் செவ்வாய்க்கிழமை (மே 4) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

சேலம்: போதிய பயணிகள் வருகை இல்லாததால் யஷ்வந்த்பூா் - கண்ணூா், பெங்களூரு - நாகா்கோயில் ரயில்கள் செவ்வாய்க்கிழமை (மே 4) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

வண்டி எண் 06537 யஷ்வந்த்பூா் - கண்ணூா் ரயில் (தருமபுரி, சேலம், கோவை) வழியாக இயக்கப்படும் தினசரி ரயில் மே 4 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06538 கண்ணூா் - யஷ்வந்த்பூா் தினசரி ரயில் மே 5 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 07235 பெங்களூரு - நாகா்கோயில் (தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா்) வழியாக இயக்கப்படும் ரயில் மே 5 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் வண்டி எண் 07236 நாகா்கோயில் - பெங்களூரு சிறப்பு ரயில் மே 6 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com