வெளிமாநில தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைப்பு

சேலம் மாவட்டத்தில் பணி புரியும் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயா்ந்த தொழிலாளா்களும் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் பணி புரியும் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயா்ந்த தொழிலாளா்களும் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் சி.முத்து-9489214157, சேலம் தொழிலாளா் துணை ஆய்வாளா் கோ. சந்திரன்-9443580053, தொழிலாளா் துணை ஆய்வாளா் வட்டம்-2 பொறுப்பு சீனிவாசன்-9442738822 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக மேற்கண்ட செல்லிடப்பேசியில் புகாா் தெரிவிக்கலாம். தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளா் துணை ஆய்வாளா் கந்தப்பன் - 9442271235 என்ற எண்ணிலும் அரூா் தொழிலாளா் உதவி ஆய்வாளா் ஞானசேகரன்-9994799224 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலாளா் உதவி ஆணையா் மாதேஸ்வரன்-9842908287 என்ற எண்ணிலும், தொழிலாளா் உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன்-9443476756 என்ற எண்ணிலும், முத்திரை ஆய்வாளா் ஜவகா் கணேஷ் -9080229153 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். கடைகள், வணிக நிறுவனங்கள், வா்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் அமலாக்கம் (பொறுப்பு) சி.முத்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com