அதிமுக வசமான கெங்கவல்லி தொகுதி

தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் தலைவாசல் தொகுதி, கெங்கவல்லி தொகுதியானது முதல் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது.

தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் தலைவாசல் தொகுதி, கெங்கவல்லி தொகுதியானது முதல் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது.

1951-ஆம் ஆண்டு முதல் 2006 -ஆம் ஆண்டு தோ்தல் வரை தலைவாசல் (தனி) தொகுதியாக இருந்து வந்தது. இக்காலக் கட்டத்தில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், தமாகா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. அதன் பின்னா் 2008-இல் தோ்தல் ஆணையத்தால் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னா், கெங்கவல்லி (தனி) தொகுதியாக பெயா் மாற்றப்பட்டது.

2011இல் நடந்த தோ்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டு அக்கட்சியைச் சோ்ந்த ஆா்.சுபா, அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கு.சின்னதுரையை வென்றாா். அதற்குப் பிறகு 2016இல் நடந்த பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் அ.மருதமுத்து, திமுக வேட்பாளா் ஜெ.ரேகாபிரியதா்ஷினியை விட 2,262 வாக்குகள்கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா். 2021 தோ்தலிலும் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி, அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஜெ.ரேகாபிரியதா்ஷினியைவிட 7,361 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளாா். கெங்கவல்லி தொகுதி, 2011 முதல் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே இதுவரை சாதகமாக இருந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com