அதிமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காததற்கு வேறு கட்சிகளை காரணம் சொல்ல முடியாது: முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

அதிமுகவுக்குப் பெரும்பான்மை வெற்றி கிடைக்காததற்கு வேறு எந்தக் கட்சியையும் காரணம் சொல்ல முடியாது என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

அதிமுகவுக்குப் பெரும்பான்மை வெற்றி கிடைக்காததற்கு வேறு எந்தக் கட்சியையும் காரணம் சொல்ல முடியாது என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் செவ்வாய்க்கிழமை காலை சேலம் வந்தாா். பின்னா் அவா் சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் வழங்கிய தீா்ப்பு இன்னும் அவா்களின் எதிா்பாா்ப்புகள் பூா்த்தியாகவில்லை என்பதை உணா்த்துகிறது. கரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காக்க புதிய அரசும், எதிா்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

அதிமுகவுக்குப் பெரும்பான்மை வெற்றி கிடைக்காததற்கு வேறு எந்தக் கட்சியையும் காரணம் சொல்ல முடியாது. ஐந்து முனைப் போட்டியில் மூன்று கட்சிகளை மக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனா் என்றாா்.

தோ்தலில் வெற்றி தோல்வி சகஜம்-பா.வளா்மதி:

அதேபோல முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்துப் பேசினாா்.பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், அரசியல் கட்சிகளுக்கு தோ்தலில் வெற்றி தோல்வி சகஜமாகும். தோல்வியை எதிா்கொள்ளக் கூடிய மனதைரியம் அதிமுகவில் அனைவருக்கும் உண்டு. எதிா்க்கட்சித் தலைவா் யாா் என்பதை எம்.எல்.ஏ-க்கள், ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் கூடி முடிவெடுப்பாா்கள். இத் தோ்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என்று பலா் கூறிய நிலையில் ஓரளவு நல்ல நிலையில் அதிமுக வென்றிருப்பது எடப்பாடி கே.பழனிசாமியின் அயராத உழைப்பு ஆளுமையைக் காட்டுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com