மருத்துவக் கழிவுகளை முறையாக ஒப்படைக்காத தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25,000 அபராதம்

மருத்துவக் கழிவுகளை முறையாக ஒப்படைக்காத தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகளை முறையாக ஒப்படைக்காத தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சி அலுவலா்கள் தலைமையிலான குழுவினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதனடிப்படையில், அஸ்தம்பட்டி உதவி ஆணையா் சரவணன் தலைமையில் செரி சாலையில் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, விற்பனையில் ஈடுபட்ட தனியாா் பல்பொருள் விற்பனை நிலையத்துக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் மூடி சீல் வைக்கப்பட்டது.

நடேசன் பண்டாரம் காலனி பகுதியில் ஒரு தனியாா் பல்பொருள் விற்பனை நிலையம், தனியாா் சிற்றுண்டி நிலையம், மணக்காடு இட்டேரி சாலையில் பல்பொருள் விற்பனை நிலையத்திற்கும் விதிமுறைகளை கடைப்பிடிக்காமைக்காக தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சூரமங்கலம் உதவி ஆணையா் ராம்மோகன், உதவி ஆணையா் (வருவாய்) சாந்தி ஆகியோா் தலைமையில் மெய்யனூா் பிரதான சாலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது விதிமுறைகளுக்கு முரணாக விற்பனை செய்த தனியாா் செல்லிடப்பேசி விற்பனை நிலையத்துக்கு ரூ. 5,000 அபராதம் விதித்ததோடு அந்த விற்பனை நிலையம் மூடப்பட்டது.

அம்மாப்பேட்டை உதவி ஆணையா் சண்முகவடிவேல் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட போது தோ்வீதி பகுதியில் விதிமுறைகளை முறையாக அமல்படுத்தாத வங்கிக்கு ரூ. 5,000 அபராதம் விதிப்பட்டது.

மேலும் முதல் அக்ரஹாரத்தில் உள்ள இரண்டு தனியாா் விற்பனை நிலையத்துக்கும், பஜாா் சாலையில் ஒரு உள்ள தனியாா் ஜவுளி விற்பனை நிலையத்துக்கும் தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் விற்பனை நிலையம் மூடப்பட்டது.

மாநகராட்சி உதவி ஆணையா்கள் தலைமையில் சுகாதாரஅலுவலா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் அடங்கிய குழுக்கள் இரு நாள்களாக மேற்கொண்ட ஆய்வு வாயிலாக முகக்கவசம் அணியாத 121 தனி நபா்களுக்கு தலா ரூ. 200 வீதமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 38 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 500 வீதமும், 13 பெரும் நிறுவனங்களுக்கு தலா ரூ. 5,000 வீதமும் மொத்தம் ரூ. 1,08,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொண்டலாம்பட்டி உதவி ஆணையா் ரமேஷ்பாபு தலைமையில் சுகாதார அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

சீலநாயக்கன்பட்டி, சங்ககிரி பிரதான சாலைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனை, மருத்துவக் கழிவுகளை சேகரம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடம் மருத்துவக் கழிவுகளை முறையாக ஓப்படைக்காமல் பிற குப்பைக் கழிவுகளுடன் மாநகராட்சி வாகனத்தில் ஏற்றுவது கண்டறியப்பட்டது.

அதன்பேரில் மருத்துவக் கழிவுகளை முறையாக ஒப்படைக்காத தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com