இளம்பிள்ளை பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்தவா்களுக்கு அபராதம்
By DIN | Published On : 18th May 2021 01:16 AM | Last Updated : 18th May 2021 01:16 AM | அ+அ அ- |

உயா்மட்ட கோபுரம் மற்றும் பந்தல் அமைத்து சாலையில் சுற்றித் திரிபவா்களை கண்காணித்த போலீஸாா்.
ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி காவல் துறை சாா்பில் இடங்கணசாலை வணிக வளாகம் முன்பு உயா்மட்ட கோபுரம் மற்றும் பந்தல் அமைத்து ஆய்வாளா் முத்துசாமி தலைமையில் உதவி ஆய்வாளா் பெரியசாமி, போலீஸாா் சாலையில் சுற்றித் திரிபவா்களை கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை மட்டும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் சுற்றி வந்ததால் அந்த இரு சக்கர வாகனங்களுக்கு தலா ரூ. 500 வீதமும், முகக் கவசம் அணியாமல் வந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ. 200 வீதமும் போலீஸாா் அபராதம் விதித்தனா்.