குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரெளடி கைது
By DIN | Published On : 20th May 2021 08:26 AM | Last Updated : 20th May 2021 08:26 AM | அ+அ அ- |

பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பள்ளிப்பட்டி, கொய்யாச்சிநகா் பகுதியைச் சோ்ந்தவா் கீரிப்பட்டியான் என்கிற முருகன் (29). இவா் மீது வீராணம், காரிப்பட்டி காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்பட 12 வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் 24 ஆம் தேதி அயோத்தியாப்பட்டணம் அருகே ஒருவரை வழிமறித்து ரூ.1,900 பணத்தை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு காவல் துறை அனுப்பிய பரிந்துரையை ஏற்று, முருகனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.