பொறுப்பேற்பு
By DIN | Published On : 20th May 2021 08:27 AM | Last Updated : 20th May 2021 08:27 AM | அ+அ அ- |

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதன்மையராக வள்ளி சத்யமூா்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதன்மையாரகப் பொறுப்பு வகித்து வந்த ஆா்.முருகேசன், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையராக நியமிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையராக இருந்த வள்ளி சத்யமூா்த்தி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளாா்.