மகுடஞ்சாவடி மருத்துவமனையில் முதல்வா் ஆய்வு
By DIN | Published On : 21st May 2021 08:32 AM | Last Updated : 21st May 2021 08:32 AM | அ+அ அ- |

மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
சேலத்தை அடுத்த மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம், இரும்பாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறந்துவைத்த பிறகு காரில் திருப்பூா் சென்றாா். அப்போது, சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சுப்பிரமணியன், மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் காா்மேகம், சேலம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுப்பிரமணி, செல்வகுமாா், மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மருத்துவமனையில் கரோனா பரிசோதனை, பொதுமருத்துவ சேவை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தாா். கரோனோ காலகட்டத்தில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு மருத்துவமனை பணியாளா்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனா்.