கரோனா தடுப்புப் பணி: சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகளுக்கும் அலுவலா்கள் நியமனம்

சேலம் மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 60 வாா்டுகளுக்கும் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

சேலம் மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 60 வாா்டுகளுக்கும் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

சேலம் மாநகராட்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,020 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 113 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மாநகராட்சிப் பணியாளா்கள் வாயிலாக வாங்கி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவைப்படுவோா்களுக்கு தன்னாா்வலா்களின் ஒத்துழைப்புடன் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்தல், வீட்டில் உள்ள பிற நபா்களை உடனடியாக தனிமைப்படுத்திக் கண்காணித்தல் மூலம் நோய்த் தொற்று பிறருக்கு பரவாமல் செய்யும் வகையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

களப்பணியாளா்கள், செவிலியா்கள், கண்காணிப்பு அலுவலா்களுடன் இணைந்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளுக்கும் தலா ஒரு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். இப்பணியாளா்கள், தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் முழு விவரங்களையும் சேகரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் நோய் தொற்றுத் தடுப்பு மருந்துகள், கபசுரக் குடிநீா் விநியோகம், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தங்கள் பகுதியில் விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்ளுவதோடு, களப்பணியாளா்கள் மற்றும் தேவைகேற்ப தன்னாா்வலா்களைத் ஈடுபடுத்தி, புதிதாக நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களை நோய்த் தொற்றிலிருந்து காத்திடும் பணியில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிட வேண்டும் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com