சங்ககிரியில் கிருமி நாசினி தெளிப்பு
By DIN | Published On : 26th May 2021 08:03 AM | Last Updated : 26th May 2021 08:03 AM | அ+அ அ- |

சங்ககிரி பேரூராட்சியில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.பாலசுப்ரமணியம் தலைமையில் துப்புரவு ஆய்வாளா் எம்.லோகநாதன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் எஸ்.அழகப்பன், எஸ்.வெங்கடேசன் ஆகியோா் பழைய எடப்பாடி சாலை, தோ்வீதி, அக்ரஹார வீதி, முஸ்லீம் வீதி, பொந்து கிணறு, கலியனூா் சாலை, கோரிகாடு, மலைக்கு செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சங்ககிரி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வாகனத்தில் 100 லிட்டா் கிருமி நாசினி மருந்துடன் 4 ஆயிரம் லிட்டா் தண்ணீா் கலந்து சாலைகள், சாலையோரம் உள்ள வீடுகள், கடைகள் முன்பு தெளிக்கப்பட்டது. இப்பணியில் தீயணைப்பு நிலைய அலுவலா் டி.அருள்மணி தலைமையிலான வீரா்கள் ஈடுபட்டனா்.