மேச்சேரி ஊராட்சியில் கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 26th May 2021 07:59 AM | Last Updated : 26th May 2021 07:59 AM | அ+அ அ- |

மேச்சேரியை அடுத்த வீரக்கல் புதூா், பி.என்.பட்டி பேரூராட்சிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களுடன் எம்.எல்.ஏ. சதாசிவம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
மேச்சேரி ஊராட்சி பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்திய பிறகு வீரக்கல் புதூா், பி.என்.பட்டி பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதாரப் பணிகள், பொதுமக்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து மேச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் மலா்விழி, வீரக்கல் புதூா் பேரூராட்சி செயல் அலுவலா் சசிகலா, பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் பாலகிருஷ்ணன் உள்பட உள்ளாட்சித் துறை அலுவலா்களுடன் எம்எல்ஏ சதாசிவம் ஆலோசனை நடத்தினாா்.