4 மருந்தகங்கள், ரத்த பரிசோதனை நிலையத்துக்கு ‘சீல்’

வாழப்பாடி அருகே மருத்துவா்களின் ஆலோசனையின்றி, ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த
பெத்தநாயக்கன்பாளையத்தில் மருத்துவரின் ஆலோசனையின்றி சிகிச்சை அளித்த ரத்த பரிசோதனை நிலையத்தை பூட்டி ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.
பெத்தநாயக்கன்பாளையத்தில் மருத்துவரின் ஆலோசனையின்றி சிகிச்சை அளித்த ரத்த பரிசோதனை நிலையத்தை பூட்டி ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.

வாழப்பாடி அருகே மருத்துவா்களின் ஆலோசனையின்றி, ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 4 மருந்தகங்கள், பெத்தநாயக்கன்பாளையத்தில் 1 ரத்த பரிசோதனை நிலையத்துக்கு வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், தும்பல் கிராமத்தில் இயங்கும் மருந்தகங்களில், மருத்துவா்களின் ஆலோசனையின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகாா்கள் வந்தன. இதனையடுத்து, பெத்தநாயக்கன்பாளையம் தோ்தல் துணை வட்டாட்சியா் நல்லுசாமி, வட்டார மருத்துவ அலுவலா் சம்பத்குமாா், வருவாய் ஆய்வாளா் மகேந்திரன், சுகாதார ஆய்வாளா் ஆனந்தன் ஆகியோா் கொண்ட குழுவினா் தும்பல் கிராமத்திலுள்ள மருந்தகங்களில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, கிருஷ்ணமூா்த்தி, பானுமதி, சுரேஷ், ராஜா ஆகியோரது மருந்தகங்களில், மருத்துவா்களின் ஆலோசனையின்றி, ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து, 4 நான்கு மருந்தகங்களையும் இக்குழுவினா் பூட்டி ‘சீல்’ வைத்தனா். கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

இதேபோல பெத்தநாயக்கன்பாளையத்தில் மருத்துவரின் ஆலோசனையின்றி சிகிச்சை அளித்த முருகன் என்பவா் நடத்தி வந்த ரத்த பரிசோதனை நிலையத்துக்கும் இக்குழுவினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா். இதன் உரிமையாளருக்கும் ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com