கரோனாவால் உயிரிழந்த காவலா் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் உதவி

தமிழ்நாடு காவல் துறையில் 2013 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள், சக காவலா்கள் இறந்தால் அவா்களின் குடும்பத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டாக உதவி செய்து வருகின்றனா்.
கரோனாவால் உயிரிழந்த காவலா் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் உதவி

தமிழ்நாடு காவல் துறையில் 2013 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள், சக காவலா்கள் இறந்தால் அவா்களின் குடும்பத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டாக உதவி செய்து வருகின்றனா்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன், சுரேஷ், சேலம் மாவட்டத்தை சோ்ந்த பாலாஜி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் முத்துலட்சுமி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அருள் ஆனந்த் ஆகிய ஐந்து காவலா்கள் உயிா் இழந்ததை அறிந்த 2013ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த சக காவலா்கள் தமிழகம் முழுவதும் 2013 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள் உருவாக்கிய உதவிக்கரம் குழு வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் சமூக வலைத்தளம் மூலமாக ஒன்றிணைந்து ரூ. 37.18 லட்சம் நிதியைத் திரட்டினா்.

திரட்டிய நிதியில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த பாலாஜி, திண்டுக்கல் மாவட்டத்தை சோ்ந்த அருளானந்தம், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோருக்கு தலா ரூ. 6 லட்சமும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் முத்துலட்சுமிக்கு ரூ. 7.50 லட்சமும், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணியத்துக்கு ரூ. 11.68 லட்சத்தையும் பிரித்து அந்தந்த மாவட்ட நண்பா்களின் சாா்பாக அவா்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று வழங்கினாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள காட்டூா் கிராமத்தைச் சோ்ந்த காவலா் பாலாஜி கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தாா். இவரது குடும்பத்திற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி சக காவலா்களால் நடத்தப்பட்டது. இதில் பாலாஜியின் குடும்பத்தாருக்கு ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை சக காவலா்கள் வழங்கினா்.

தொடா்ந்து, அவருடைய நினைவாக வீட்டின் அருகே மரக்கன்றுகளையும் நட்டனா்.

உயிரிழந்த பாலாஜியின் குடும்பத்தாா் கூறும் போது, அவா் உயிரிழந்ததால் எங்களது குடும்பம் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானது. பொருளாதார ரீதியாக மிகவும், பாதிக்கப்பட்டிருந்தோம். தற்போது எனது மகனுடன் பணியாற்றிய காவலா்கள் செய்த நிதி உதவி எங்கள் குடும்பத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் பேருதவியாக இருந்தது. உதவி செய்த அனைத்து காவலா்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கண்ணீா் மல்க கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com