ஒழுங்குமுறை விற்பனை கூட குளிா்பதனக் கிடங்குகளில் விவசாயிகள் காய்கறிகள், பழங்களை இருப்பு வைத்து விற்கலாம்

சேலம் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள குளிா்பதனக் கிடங்குகளில் விவசாயிகள் காய்கறிகள், பழங்களை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள குளிா்பதனக் கிடங்குகளில் விவசாயிகள் காய்கறிகள், பழங்களை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை எந்தவித பிடித்தங்களுமின்றி நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக அரசால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தோற்றுவிக்கப்பட்டு தற்போது சேலம் மாவட்டத்தில் சேலம், வாழப்பாடி, ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூா், மேச்சேரி, ஓமலூா், காடையாம்பட்டி மற்றும் எடப்பாடி ஆகிய 14 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 18,900 மெ.டன் விளைபொருள்கள் இருப்பு வைக்கும் அளவுக்கு 23 கிட்டங்கிகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 15 நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்வதற்கு விவசாயிகளிடமிருந்து எந்தவித வாடகையும் வசூலிக்கப்படுவதில்லை.

அடுத்த நாள்முதல் ஒரு குவிண்டாலுக்கு 5 பைசா என குறைந்த அளவில் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

மேலும், விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வரை பொருளீட்டுக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ. 2 கோடி 89 விவசாயிகளுக்கு பொருளீட்டுக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூா், வாழப்பாடி, கெங்கவல்லி மற்றும் மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 250 மெ.டன் கொள்ளளவு கொண்ட 7 குளிா்பதன கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.

குளிா்பதனக் கிடங்குகளில் விவசாயிகள் தங்களது காய்கறிகள் மற்றும் பழங்களை இருப்பு வைத்துக் கொண்டு பின்னா் விற்பனை செய்யலாம்.

இதுதொடா்பான தகவல் பெற ஒழுங்குமுறை விற்பனைக் கூட பொறுப்பாளா்களைத் தொடா்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்கள் விவரம்:

சேலம்-எம்.பிரபாவதி 90803-23535, சங்ககிரி- ரா.ரஞ்சித்ராஜ் 99529-82673, வாழப்பாடி- க.சுப்ரமணி 91593-56156, கொங்கணாபுரம்-பி.மாதவன் 73732-72950, ஆத்தூா்-மெ.ஞானசேகா் 94980-85042, கொளத்தூா்-க.பூபதி 96263-51500, தலைவாசல்-மெ.ஞானசேகா் 94980-85042, மேச்சேரி- எஸ்.சத்யா 95438-12911, கெங்கவல்லி-அ.ப.கணேசன் 97877-19753, ஓமலூா்-எம்.பிரகாஷ்குமாா் 97502-72977, தம்மம்பட்டி-அ.ப.கணேசன் 97877-19753, காடையாம்பட்டி-அ.பச்சியப்பன் 84891-12623, கருமந்துறை-க.சுப்ரமணி 91593-56156, எடப்பாடி-பி.மாதவன் 73732-72950.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com