கரோனா தொற்று: வீடுவீடாகக் கணக்கெடுப்புத் தொடங்கியது

வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
வாழப்பாடியில் நடைபெற்ற கரோனா தடுப்புப் பணி குறித்த கலந்தாய்வுக் கூட்டம்.
வாழப்பாடியில் நடைபெற்ற கரோனா தடுப்புப் பணி குறித்த கலந்தாய்வுக் கூட்டம்.

வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளைக் கண்காணிக்க சேலம், தனி துணை ஆட்சியா் (முத்திரைத் தாள்) கோவிந்தனும், அயோத்தியாப்பட்டணம் பகுதிக்கு வாழப்பாடி வட்டாட்சியா் மாணிக்கமும் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம், வியாழக்கிழமை வாழப்பாடியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

துணை ஆட்சியா் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வட்டாட்சியா் மாணிக்கம் மற்றும் வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில், வருவாய்த்துறை சுகாதாரத்துறை, ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் பகுதியில் கிராமங்கள்தோறும், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மைய பணியாளா்கள் ஒன்றிணைந்து வீடுவீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் மற்றும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்களின் விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துவது பற்றி கலந்தாய்வு செய்தனா். இதையடுத்து, வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் பகுதியில் அந்தந்தக் கிராமங்களுக்கு நியமிக்கப்பட்ட குழுவினா் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com