நங்கவள்ளி வட்டார விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

நங்கவள்ளி வட்டாரத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் வேளாண் அதிகாரிகளைத்

நங்கவள்ளி வட்டாரத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் வேளாண் அதிகாரிகளைத் தொடா்பு கொள்ளலாம் என தோட்டக்கலைத் துறை அலுவலா் குமரவேலு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து நங்கவள்ளி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலா் குமரவேலு கூறியதாவது:

நங்கவள்ளி வட்டாரத்தில் 20 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நங்கவள்ளி வட்டார விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் நங்கவள்ளி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். விளைபொருள்களை விற்பனை செய்ய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

நங்கவள்ளி, ஆவடத்தூா், வீரத்கல், கோனூா் கிழக்கு ஆகிய கிராம விவசாயிகள்- துணை தோட்டக்கலை அலுவலா் சங்கா், செல்லிடப்பேசி எண்: 88388 86735, சூரப்பள்ளி, தோரமங்கலம், வனவாசி, கரிக்காப்பட்டி, கோனூா் மேற்கு, வீரக்கல்புதூா், சின்னசோரகை, பெரியசோரகை, மல்லிகுட்டப்பட்டி, பி.என்.பட்டி மற்றும் தாசகப்பட்டி பகுதி விவசாயிகள்- தோட்டக்கலை உதவி இயக்குநா் குமரவேல் தொடா்பு எண்: 9790669172, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் உத்திரசாமி 90803 92008, குமரவேல் 93601-55922 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com