சேலத்தில் களை கட்டிய தீபாவளி விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலத்தில் வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை துணிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலத்தில் வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை துணிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பா் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் சேலத்தில் உள்ள அனைத்து துணிக்கடைகளிலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது.

சேலத்தைப் பொருத்தவரையில் கடை வீதி, முதல் அக்ரஹாரம், தோ் நிலையம், புதிய பேருந்து நிலையம், நான்கு சாலை, ஐந்து சாலை, அருணாசல ஆசாரி தெரு பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதி பகுதிகளில் போலீஸாா் ரோந்து வந்தனா். ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி திருட்டு தொடா்பான அறிவிப்புகளை வெளியிட்டனா். மேலும், புதிய பேருந்து நிலையம் மற்றும் கடை வீதி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸாா் நெரிசலை ஒழுங்குபடுத்தினா்.

அதேபோல தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் தாதுபாய் குட்டை பகுதியில் துணி மாா்க்கெட் போடப்பட்டிருந்தது. இதையடுத்து பிற்பகலில் திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து துணி மற்றும் வளையல் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனா். இதனால் தாதுபாய் குட்டை பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூரைச் சோ்ந்த துணி வியாபாரிகள் தெருக்களில் கடைகள் போட்டு புடவைகள் மற்றும் பெண்களுக்கு தேவையான துணி வகைகளை விற்பனை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com