நிரம்புகிறது மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில்  எந்த நேரத்திலும் உவர் நீர் திறக்கப்படும் என்பதால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிரம்புகிறது மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை நாளை மாலைக்குள் நிரம்பும் என்பதால் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அணையை ஆய்வு செய்த பின் எந்த நேரத்திலும் உவர் நீர் திறக்கப்படும் என்பதால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடி கடந்துவிட்ட நிலையில் நாளை மாலைக்குள் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்பதால் இன்று மேட்டூர் அணை பல்வேறு பகுதிகளில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறும்போது, மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

காவிரியில் குளிக்க மற்ற செயல்பாட்டுக்கு கரைகளுக்கு வரக்கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டூர் அணையின் இருகரைகளிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை மேட்டூர் அணையின் நிலவரம் குறித்து தகவல் அளிப்பதாகவும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார். 

எச்சரிக்கை:

நாளை மாலைக்குள் மேட்டூர் அணை நிரம்பும் என்பதால் எந்த நேரத்திலும் உபரிநீர் கூடுதலாக திறப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயிகள் மீனவர்கள்  பாதுகாப்பாக  இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் வெள்ள கட்டுப்பாட்டு அறை இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர் கண்காணிப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நீர்திறப்பு குறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை காவிரி கரையோரப் பகுதிகளில்  செக்கானூர், பூலாம்பட்டி, கூடக்கல் ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

பள்ளி. கல்லூரி விடுமுறை:

இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கரையோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேட்டூர் அணையில் எண்பத்தி எட்டு ஆண்டுகால வரலாற்றில் 41வது ஆண்டாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com