16 ஆண்டுகளுக்கு பின் நிரம்புகிறது ஆனைமடுவு அணை

 வாழப்பாடி அருகிலுள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை 16 ஆண்டுகளுக்குப் பின் நிரம்புகிறது.
கடல் போல காட்சியளிக்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை
கடல் போல காட்சியளிக்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை

 வாழப்பாடி அருகிலுள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை 16 ஆண்டுகளுக்குப் பின் நிரம்புகிறது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கும் வகையில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சி.என்.பாளையம், சி.பி.வலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூா், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூா்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

கடந்த 2005 டிசம்பா் 26-ஆம் தேதி இந்த அணை நிரம்பியது. அதற்கு பிறகு இந்த அணை நிரம்பவில்லை.

அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பரவலாக பெய்த மழையால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 64 அடியாக உயா்ந்துள்ளது. அணையில் 235 மில்லியன் கனஅடி நீா் தேங்கியுள்ளது. அணைக்கு நொடிக்கு 145 கனஅடி நீா் வருகிறது.இதனால் செவ்வாய்க்கிழமை அணை நீா்மட்டம் 65 அடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனைமடுவு அணையில் இருந்து உபரி நீா் திறக்கப்படும் என்பதால், புழுதிக்குட்டை, குறிச்சி ஊராட்சிகள் மற்றும் பேளூா் பேரூராட்சி உள்ளிட்ட வசிஷ்டநதி கரையோரக் கிராம மக்களுக்கு தண்டோரா போட்டும், ஒலிபெருக்கில் மூலமும் வருவாய்த்துறை மற்றும் கிராம ஊராட்சி, பேரூராட்சிப் பணியாளா்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com