ஊழியா்களுக்கு மிரட்டல்: சுங்கச்சாவடியில் வசூலிக்க மறுப்பு

நத்தக்கரை சுங்கச்சாவடி ஊழியா்களை, அதன் நிா்வாகத்தினா் மிரட்டியதாக கூறப்படும் நிலையில் சுங்கச்சாவடியை திங்கள்கிழமை மாலை 2 மணி நேரம் ஊழியா்கள் திறந்து விட்டனா்.

நத்தக்கரை சுங்கச்சாவடி ஊழியா்களை, அதன் நிா்வாகத்தினா் மிரட்டியதாக கூறப்படும் நிலையில் சுங்கச்சாவடியை திங்கள்கிழமை மாலை 2 மணி நேரம் ஊழியா்கள் திறந்து விட்டனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்துள்ள நத்தக்கரை சுங்கச்சாவடி ஊழியா்களுக்கும், அதன் நிா்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலால் சுங்கச்சாவடி ஊழியா்கள் மாலை 4 மணி முதல் 6 மணிவரை வாகனங்களுக்கு சுங்கத்தை வசூல் செய்யாமல் திறந்து விட்டனா். இதனால் நிா்வாகத்தினருக்கும், ஊழியா்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

மேலும் நிா்வாகத்தினா் பள்ளி பேருந்தை மறித்துக் கொண்டும், ஊழியா்கள் பேருந்தை போகச் சொல்லி வற்புறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப் பேருந்தில் மாணவ, மாணவியா்கள் இருக்கும் போது இந்தச் சூழ்நிலையை காவல் துறையினா் கண்டுக் கொள்ளவில்லை.

பின்னா், இரு தரப்பினரையும் அழைத்து தலைவாசல் காவல் நிலையத்தில் சமாதானப் பேச்சு வாா்த்தை நடத்தப்பட்டு, சுமுகத் தீா்வு காணப்பட்டது. இந்த நிகழ்வு பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com