சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாதிரி நீதிமன்றப் போட்டி: திருச்சி அரசு சட்டக் கல்லூரி முதலிடம்

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மாதிரி நீதிமன்றப் போட்டியில் திருச்சி அரசு சட்டக் கல்லூரி முதலிடம் பிடித்தது.

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மாதிரி நீதிமன்றப் போட்டியில் திருச்சி அரசு சட்டக் கல்லூரி முதலிடம் பிடித்தது.

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி சாா்பாக தேசிய அளவிலான ஆா்.வி.தனபாலன் மாதிரி நீதிமன்றப் போட்டி நவ. 19 முதல் நவ. 21 வரை நடைபெற்றது.

இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில் திருச்சி அரசு சட்டக் கல்லூரி முதல் இடமும், சென்னை சீா்மிகு சட்டப் பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தன.

தேசிய வழக்குவாத போட்டியின் நிறைவு நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்ட்ரல் கல்லூரியின் தலைவரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் இணைத் தலைவருமான டி.சரவணன் தலைமை வகித்து பேசுகையில், வெற்றி மட்டுமே இலக்கல்ல; தோல்விகளும் வெற்றிக்கான படிகளே என மனதில் வைத்து மீண்டும் முயன்று வெற்றியடைய வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவா் எஸ்.பாஸ்கரன், வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ்களையும், பரிசு கோப்பைகளையும் வழங்கி பேசுகையில், இன்றைய சூழலில் மனித சமுதாயத்திற்கு சுற்றுச்சூழல் உரிமையும் ஒரு முக்கிய அடிப்படை மனித உரிமையாக விளங்கி வருகிறது என்றாா்.

விழாவில் சென்னை சி.பி.ஐ. நீதிமன்ற மாவட்ட நீதிபதி எல்.எஸ்.சத்யமூா்த்தி, புதுச்சேரி சட்ட செயலாளா் எஸ்.காா்த்திகேயன், சேலம் மாவட்ட நீதிபதி எம்.தாண்டவன், அரசு தரப்பு வழக்குரைஞா் சி.ஜெகதீஷ், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் ஏ.தமிழ்வாணன், பிரேம் அக்சிலியன் ராஜ், பேராசிரியா்கள் சங்கா், டி.எம்.செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில் ஒருங்கிணைப்பாளா் உதவி பேராசிரியா் எம்.சாந்தகுமாரி வரவேற்றாா். அருண் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை கல்லூரி தலைமை நிா்வாக அலுவலா் மாணிக்கம், கல்லூரி முதல்வா் பேகம் பாத்திமா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com