மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாகச் சரிவு

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து பகல் ஒரு மணிக்கு வினாடிக்கு 30,000 கன அடியாகச் சரிந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாகக் குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாகக் குறைந்தது

சேலம்: இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக உள்ளது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து பகல் ஒரு மணிக்கு வினாடிக்கு 30,000 கன அடியாகச் சரிந்தது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 30,000 கன அடியாக நீடித்து வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக உள்ளது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 13,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவும் நீர் இருப்பு 93.63 டிஎம்சி ஆகவும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com