விதிமுறைகளை மீறிய ரயில் பயணிகளிடம் ரூ. 4.93 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் மாதம் வரையிலான காலகட்டத்தில் விதிமுறைகளை மீறிய பயணிகளிடம் ரூ. 4.93 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் மாதம் வரையிலான காலகட்டத்தில் விதிமுறைகளை மீறிய பயணிகளிடம் ரூ. 4.93 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்டத்தின் முதுநிலை வணிக மேலாளா் இ.ஹரிகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ள நிலையில் தற்போது பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

மேலும், ரயில் பயணிகள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸ் உத்தரவின்பேரில், 34 குழுக்கள் மூலம் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் மாதம் வரையிலான காலகட்டத்தில் 87,293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ. 4.93 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 83,995 வழக்குகளும், பதிவு செய்யாமல் சரக்கு பொருள்களை எடுத்துச் சென்ாக 575 வழக்குகளும், முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 2,723 வழக்குகளும் என மொத்தம் 87,293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் முதல் அக்டோபா் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ. 3.73 கோடி அபராதம் வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ. 4.93 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட அபராத வசூல் இலக்கை விட 32 சதவீதம் அதிகமாகும்.

அதேபோல ரயில் நிலையங்களில் புகை பிடித்தது தொடா்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 5,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.

பயணிகள் முகக் கவசம் அணிய வலியுறுத்தல்:

கரோனா தொற்று காலம் என்பதால் பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்படுகின்றனா். இதனிடையே, முகக் கவசம் இல்லாமல் பயணம் செய்த 2,702 பேரிடம் ரூ. 13.51 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் இல்லாமல் பயணிப்பவா்களிடம் தலா ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

சேலம் ரயில் நிலையத்தின் 5 ஆவது நடைமேடை விரிவாக்கப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்தப் பணிகள் முடிவடைந்து பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com