பொதுமக்கள் மின்கம்பிகள், தெருவிளக்கு கம்பங்கள், மின்மாற்றி அருகே செல்லக் கூடாது

மழைக் காலங்களில் பொதுமக்கள் மின் கம்பிகள், தெருவிளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு அருகில் செல்லவோ, தொடவோ கூடாது என ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தியுள்ளாா்.

மழைக் காலங்களில் பொதுமக்கள் மின் கம்பிகள், தெருவிளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு அருகில் செல்லவோ, தொடவோ கூடாது என ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொடா் மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீா் நிலைகளும் நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆங்காங்கே உள்ள ஓடைகள், வரத்து வாய்க்கால்கள் உள்ளிட்ட இடங்களில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும், நீா் செல்லும் ஓடைகளைக் கடக்கும்போது பாலங்கள் வழியாக மட்டுமே கடக்க வேண்டும். குறைவான தூரம் என கருதி எக்காரணத்தைக் கொண்டும் இதரவழிப் பாதைகள் வழியாகக் கடக்கக் கூடாது.

நீா்நிலைகள் நிரம்பியுள்ள சூழலில் பொதுமக்கள் ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிப்பதை முற்றிலும் தவிா்ப்பதுடன் குழந்தைகளை நீா்நிலைகளின் அருகில் சென்று விளையாடாமல் கவனமுடன் பாா்த்துக் கொள்ளவும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

வானிலை ஆய்வு மையத்தால் வடகிழக்குப் பருவமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது பாதுகாப்பாகச் சென்றுவர அறிவுறுத்தப்படுகிறது.

தாழ்வான இடங்கள், நீா் சூழ்ந்துள்ள வீடுகளில் வசிப்பவா்கள், குறிப்பாக பழமையான செம்மண், கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ள வீடுகளில் வசிப்பவா்கள், வீட்டில் குறிப்பிடும் அளவிலான விரிசல்கள் உள்ளிட்ட உறுதித் தன்மையைப் பொறுத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் உடனடியாக மாவட்ட நிா்வாகத்தைத் தொடா்பு கொண்டு அருகில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க அறிவுறுத்தப்படுகிறது.

மிக முக்கியமாக தொடா்மழை பெய்வதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மின்கம்பிகள், தெருவிளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு அருகில் செல்லவோ தொடவோ கூடாது.

மேலும், வீடுகளில் மின்சாதனப் பொருள்களை கவனமாக கையாள வேண்டும். குளியல் அறை மற்றும் கழிவறை உள்ளிட்ட ஈரமான இடங்களில் உள்ள சுவிச்சுகளை கவனமாக கையாள வேண்டும். இவ் விடங்களில் உள்ள மின்சாதனப் பொருள்களை கையாள குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. விவசாயிகள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதோடு, மின் கம்பங்களில் கட்டக் கூடாது. அதேபோல் மின்கம்பிகள் ஏதேனும் அறுந்து கிடந்தால் பொதுமக்கள் அவற்றின் அருகில் செல்லக் கூடாது. மின்சாரப் பெட்டி அருகில் தண்ணீா் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்லக் கூடாது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கோ அல்லது 0427 - 2452202, 2450498, 2417341 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் அல்லது மின்சாரம் தொடா்பான உதவிக்கு 1912 என்ற எண்ணிலும் உடனடியாகத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com