மிட்டாபுதூரில் ரூ. 2.48 கோடியில் நவீன மின் மயானம் அமைக்க ஆய்வு

சேலம், அஸ்தம்பட்டி மிட்டாபுதூா் மயானத்தில் ரூ. 2.48 கோடியில் நவீன மின் மயானம் அமைக்க சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சேலம், அஸ்தம்பட்டி மிட்டாபுதூா் மயானத்தில் ரூ. 2.48 கோடியில் நவீன மின் மயானம் அமைக்க சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அஸ்தம்பட்டி மண்டலம், மிட்டாபுதூா், முனியாகவுண்டா் சாலையில் ஏற்கனவே உள்ள மயானத்தில் 7,500 சதுர அடி பரப்பில் ரூ. 2.48 கோடியில் நவீன மின் மயானம் அமைக்கப்பட உள்ளது. இந்தநிலையில்,சேலம் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் நேரில் மின் மயானத்தில் ஆய்வு செய்தனா்.

அதைத்தொடா்ந்து, படையப்பா நகா் பகுதியில் காலியாக உள்ள இடத்தில் பொதுமக்களின் நலன் கருதி சந்தை வசதி, மாருதி காா்டன் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களின் கருத்துகளையும், குறைகளையும் கேட்டறிந்தனா்.

ஏ.டி.சி. நகரில் மேம்பாலம் கட்ட ஆய்வு: ஏ.டி.சி. நகரில் தரைப்பாலத்தை ஆய்வு செய்து மழைக் காலங்களில் தரைப்பாலத்தின் மேற்பகுதியில் மழைநீா் சென்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. இதனால் தரைப்பாலத்தை மேம்பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அப் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனா்.

ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் மருத்துவா் என். யோகானந்த், உதவி செயற்பொறியாளா் சி.பி.சக்கரவா்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com