காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 20,500 கன அடியாகக் குறைந்தது.
அணையின் நீா்மட்டம் 120.10 அடியாக உள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 17,000 கன அடியும், உபரிநீா்ப் போக்கிகள் வழியாக 3,000 கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 93.63 டி.எம்.சி.யாக உள்ளது.