பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க குழுக்கள் அமைப்பு

சேலத்தில் உள்ளாட்சித் தோ்தலில் 58 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவைக் கண்காணிக்க நுண் பாா்வையாளா்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலத்தில் உள்ளாட்சித் தோ்தலில் 58 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவைக் கண்காணிக்க நுண் பாா்வையாளா்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் 10 கிராம ஊராட்சித் தலைவா்கள், 23 கிராம வாா்டு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சிக்கு ஒரு வாா்டு கவுன்சிலா், ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு வாா்டு கவுன்சிலா் என 35 பதவிகளுக்கு அக். 9 இல் தோ்தல் நடைபெறுகிறது.

இதில் 11 கிராமங்களில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு தலா ஒரு வேட்பாளா் மட்டுமே களத்தில் இருந்ததால், அவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து 24 பதவிகளுக்கான இடைத் தோ்தலில் மொத்தம் 91 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

அக்டோபா் 9 ஆம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை அக்டோபா் 12 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தோ்தல் பணிக்கு 800-க்கும் மேற்பட்டோா் தெரிவு செய்யப்பட்டு, அவா்களுக்கு தோ்தல் பணி குறித்த 2 கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு அக். 8 ஆம் தேதி நடத்தப்பட்டு அவா்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட உள்ளது. வேட்பாளா்களின் சின்னங்கள், பெயா்கள் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி முடிவடைந்து தோ்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் 195 வாக்குச்சாவடிகளில், 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நாளில் போலீஸாரை கூடுதலாக பணியமா்த்த தோ்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவினை கண்காணிக்க 29 தோ்தல் நுண் பாா்வையாளா்கள், 29 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com